தமிழ் செம்படைக் கழகம்

அறிக்கை விவரம்

blog

திருச்செங்கோட்டில் டி.ஆர். சுந்தரம் முதலியார் நினைவு மண்டபம் அமைக்க வலியுறுத்தி தமிழ் செம்படைக் கழகம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது

05 Aug, 2025

திருச்செங்கோடு: தமிழ் திரைப்படத்துறையின் முன்னோடியும், மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் நிறுவுநர்மான டி.ஆர். சுந்தரம் முதலியார் அவர்களுக்கு திருச்செங்கோட்டில் அவரது முழுஉருவச் சிலையுடன் நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், தமிழ் செம்படைக் கழகம் சார்பில் தமிழக முதல்வர் அவர்களுக்கும், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் அவர்களுக்கும் அதிகாரப்பூர்வமாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழ்த் திரைப்பட வரலாற்றிலும், திராவிட இயக்க வளர்ச்சியிலும் முக்கியப் பங்காற்றிய டி.ஆர். சுந்தரம் முதலியார் வாழ்க்கை பாரம்பரியமாக இருக்கவேண்டும் என்பதற்காகவே இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

info@tamilredarmy.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தொகுதியின் பெயர் (வசிப்பது தமிழ்நாடு எனில்) அல்லது மாநிலத்தின் பெயர் (வெளி மாநிலம்) அல்லது நாட்டின் பெயரை (வெளி நாடு) உங்கள் மின்னஞ்சல் முகவரியில் இருந்து குறுஞ்செய்தியாக அனுப்பவும்.

தமிழ் செம்படைக் கழகம்

ஒவ்வொரு நாமும் ஒளிக்கதிர்,
ஒன்றினைந்து அமைப்பைச் சுடராக்குவோம்!